தீவிரவாதம், வன்முறை போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியாவை தடை செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கர்நாடகாவில் நடந்த பல இந்து அமைப்பினர் கொலை வழக்குகளில் எஸ்.டி.பி.ஐ.,க்கு தொடர்புள்ளது. சமீபத்தில் மைசூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., தன்வீர் செய்ட்டை கொல்ல நடந்த முயற்சியிலும், அவர்களுக்கு தொடர்புள்ளது. 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மங்களூரில் நடந்த போராட்டம், கலவரமாக மாறியதில் எஸ்.டி.பி.ஐ.,யின் பின்னணி இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைகள், வெளிநாட்டிலுள்ள தீவிரவாத அமைப்பினருடன் இணைந்து நடந்துள்ளன. முந்தைய காங்கிரஸ் அரசு, எஸ்.டி.பி.ஐ., - பி.எப்.ஐ., தொண்டர்கள் மீதிருந்த வழக்குகளை கைவிட்டதால், குற்றச்சம்பவங்கள் மீண்டும் தலை துாக்கியுள்ளது. 'சிமி' தீவிரவாத அமைப்பு தடை செய்யப்பட்ட பின், வேறு பெயர்களில், தீவிரவாத செயல்கள் நடக்கின்றன. இவர்களுக்கு வெளிநாட்டு தீவிரவாதிகள் உதவி வருகின்றனர். 

எனவே, கர்நாடகாவில் இவற்றை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், துவங்கியுள்ளோம். இவர்களின் தீவிரவாத செயல்களுக்கான ஆதாரங்களை திரட்டும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்தவுடன், சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து, தடை செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. மேலும், திருப்புனம் பகுதியில் ராமலிங்கம் படுகொலையில் வழக்கில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல, சமீபத்தில் நெல்லை கண்ணன் இந்த அமைப்பு நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு சோலியை முடிக்க வேண்டும் என பேசியதும் குறிப்பிடத்தக்கது.