கோழிக்கோடு, கக்குனியில் உள்ள வேலோம் பகுதியைச் சேர்ந்த பி.கே.குஞ்சப்துல்லா என்ற ஆசிரியர், கடந்த ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த கல்லாச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து, அவரது வீட்டிற்கு அருகில் உள்ள அறம்போல் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றலாகியுள்ளார். ஆனால் தங்களுக்கு பிடித்த ஆசிரியர் பள்ளியை விட்டு வெளியேறுவதைக் கண்ட அந்த மாணவ மணிகள், அவருடைய பிரிவை தாங்க முடியாமல் கண்கலங்கி நின்றுள்ளார்.
ஒரு அன்பான ஆசிரியர் வெளியேறும் போது, அது ஓய்வு காரணமாக இருந்தாலும் சரி, அல்லது அவர் வேறு பள்ளிக்கு மாறினாலும் சரி, அது மாணவர்களுக்கு ஒரு உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக மாறுகின்றது. ஒரு ஆசிரியருக்கும் அவர்களின் மாணவர்களுக்கும் இடையிலான பிணைப்பு என்பது எப்போதுமே மிகவும் வலுவாக இருக்கும்.
இந்நிலையில் குஞ்சப்துல்லா என்ற அந்த ஆசிரியரும் இதேபோன்ற ஒரு சூழ்நிலையை தான் எதிர்கொண்டுள்ளார். அவருடைய மாணவர்கள் அவரைச் சுற்றி கூடி, அவரிடம் இருந்து விடைபெறும் போது கதறி அழுதுள்ளார். வைரலான அந்த வீடியோவில், குழந்தைகள் கதறி அழுவதும், தங்கள் ஆசிரியரிடம் பள்ளியை விட்டு வெளியேற வேண்டாம் என்று கெஞ்சுவதையும் நம்மால் பார்க்கமுடிகிறது.
மாணவர்களின் உணர்ச்சிப் பிணைப்பும், அவர்களின் கண்ணீரும், தங்கள் ஆசிரியர் மீது அவர்கள் வைத்திருக்கும் ஆழமான பாசத்தின் வெளிப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளிடம் என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியாமல், கண்கலங்கி நின்றார் அந்த ஆசிரியர்.
