scares about cellphone tower radiation!

வீட்டுக்கு அருகில் இருக்கும் செல்போன் டவர்கள் வெளியிடும் கதிர்வீச்சு குறித்து இனிமேலும் கவலைப்படத்தேவையில்லை. அந்த குறிப்பிட்ட செல்போன் டவர் குறித்து நாம் கவலை தெரிவித்தால், வீட்டுக்கே வந்து ஆய்வு செய்துஅறிக்கை அளிக்கும் “டிராங் சஞ்சார்” திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு துறை டிராங் சஞ்சார் திட்டத்தை நேற்று அறிமுகம் செய்து, செல்போன் டவர்கள் குறித்த மக்களின் அச்சத்தை போக்கியுள்ளது. இதற்காக தனியாக ஒரு இணையதளத்தையும் உருவாக்கியுள்ளது. மின்னணு காந்த அலைகள் வெளியீடு குறித்த புகார்கள் என்று பெயரிடப்பட்டுள்ள தளத்தில் சென்று நமது குறைகளை பதிவு செய்யலாம்.

இது குறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-

மத்திய தொலைத்தொடர்பு துறை “தராங் சஞ்சார்” எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின்படி, ஒரு வீட்டுக்கு அருகில் இருக்கும் செல்போன் டவரில் இருந்து கதிர்வீச்சு இருப்பதாக குடியுருப்புவாசி சந்தேகம் அடைந்தார். இந்த தராங் சஞ்சார் திட்டத்துக்கான இணையதளத்தில் சென்று புகார்களை பதிவு செய்யலாம்.

மேலும், ஒரு நகரில் எத்தனை செல்போன் டவர்கள் இருக்கின்றன, அவை எந்த அளவுக்கு காந்த அலைகளை வெளியிடுகின்றன என்பது குறித்த அனைத்து தகவல்களும் அந்த தளத்தில் இருக்கிறது. அதில் குறிப்பிட்ட குடியிருப்புவாசி, தங்களது பகுதியின் முகவரியை பதவிட்டால், அந்த செல்போன் டவர் குறித்த அனைத்து தகவல்களும் வெளியாகும். ஒருவேளை அவர் தனிப்பட்ட முறையில், தனது வீட்டில் செல்போன் டவர் குறித்து சோதனை செய்ய விரும்பினால், அதற்காக தொலைத்தொடர்பு துறைக்கு ரூ.4 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும்.

இதற்காக அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு ஆய்வு மற்றும் கண்காணிப்பு குழுவினர் வீட்டுக்கே வந்து அந்த குறிப்பிட்ட செல்போன் டவரில் இருந்து, கதிர்வீச்சு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன் டவரில் கதிர்வீச்சு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யும் திட்டத்தை மத்திய தகவல்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா தொடங்கிவைத்து அதற்கான இணையதளத்தையும் தொடங்கிவைத்தார்.