SC condemns Election commission

தேர்தல் ஆணையத்தின் பதவிகளான தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஏன் தனியாகச் சட்டம் இயற்றாமல், நியமனம் நடைபெறுகிறது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பியது.

தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த நஜீம் ஜைதி நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரும், தேர்தல் ஆணையர்களில்சீனியரான ஏ.கே.ஜோதி புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நேற்று நியமிக்கப்பட்டார்.

2015ம் ஆண்டு மே 8ம் தேதி தேர்தல் ஆணையத்தின் 3 ஆணையர்களில் ஒருவராகஅச்சல் குமார் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு பதவி உயர்வு வழங்கி அவரை தலைமை தேர்தல் ஆணையராக மத்திய அரசு நியமித்துள்ளது.

பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த போது, குஜராத் மாநில தலைமைச் செயலாளராக பணியாற்றியவர் ஜோதி. அதன்பின், கடந்த 2013ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், மத்தியில் ஆளும் அரசு தலைமைத் தேர்தல் ஆணையர்களாக தங்களுக்கு சார்பானவர்களை நியமித்து வருகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதில் எந்த விதமான சட்ட விதிகளும் பின்பற்றப்படவில்லை. அதற்கான சட்டங்களும் இல்லை. எந்த விதிகளின் அடிப்படையில், தகுதியின் அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுகிறார்கள்?. இதே போலவே நீதிபதிகள் ஆணையத்திலும் தனிப்பட்ட முறையில் நியமனம் நடக்கிறது

தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் வௌிப்படைதன்மையும், நியாயமான முறையும் பின்பற்றப்பட வேண்டும் என்று கோரி அனூப்பரண்வால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதி டி.ஓய்.சந்திரசூத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனு தாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும், அரசின் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமாரும் ஆஜராகி வாதிடனர்.

அப்போது, நீதிபதிகள் கூறுகையில், இதுவரை தேர்தல் ஆணையத்தின் பதவிகளுக்கு சிறந்த மனிதர்கள் தான் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், அரசியலமைப்புச் சட்டம் 324ன் பிரிவின்படி, தலைமைத் தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் நியமனம் செய்வது சட்டப்படி நடக்க வேண்டும். ஆனால், இதுவரை இவர்கள் நியமனத்துக்கு அரசு சட்டம் ஏதும் உருவாக்கவில்லை.

தேர்தல் ஆணையர்கள் நியமனம் சட்டப்படி நடக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு உருவாக்காவிட்டால், நீதிமன்றம் அதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கும்’’ என்று தெரிவித்தனர்.