Asianet News TamilAsianet News Tamil

மீண்டுமொரு சாவர்க்கர் போஸ்டர் கிழிப்பு.. கர்நாடகாவில் தொடரும் பதற்றம் !

இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதில் கைகலப்பில் முடிந்தது. இதில், ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.

Savarkar poster torn in Karnataka Tumakuru day after Shivamogga violence
Author
First Published Aug 16, 2022, 6:58 PM IST

கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் ஷிவமோகா மாவட்டத்தில், நாட்டின், 76வது சுதந்திர தின விழாவை ஒட்டி, ஒரு தரப்பினர் பாஜகவினரால் போற்றப்படும் சாவர்க்கர் படத்துடன் கூடிய பேனரை வைத்துள்ளனர்.

Savarkar poster torn in Karnataka Tumakuru day after Shivamogga violence

மேலும் செய்திகளுக்கு..“ஒரு பள்ளி மாணவர்கள்.. சிசிடிவியில் ஸ்பிரே !” பக்கா பிளானில் சொதப்பிய கும்பல் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்

அப்போது அந்த இடத்திற்கு வந்த மற்றொரு தரப்பினர், சாவர்க்கர் பேனரை அகற்றி விட்டு, ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட திப்பு சுல்தான் பேனரை நிறுவியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதில் கைகலப்பில் முடிந்தது. இதில், ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இரு தரப்பினர் கலவரத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 

மேலும் செய்திகளுக்கு..“என்னை சந்திக்க வராதீர்கள்..எம்ஜிஆர் பாடல் !” சசிகலா திடீர் உத்தரவு - தொண்டர்கள் ஷாக்

Savarkar poster torn in Karnataka Tumakuru day after Shivamogga violence

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஷிவமோகா காவல் துறையினர், தடியடி நடத்தி, கூட்டத்தைக் கலைத்தனர். சம்பவ இடத்தில் இருந்து பேனரை அகற்றி விட்டு, தேசியக் கொடியை, காவல் துறையினர் ஏற்றி வைத்தனர். இதை அடுத்து அந்தப் பகுதியை காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இந்த வன்முறைக்குப் பிறகு கர்நாடகாவின் துமகுருவில் மீண்டும் சாவர்க்கர் போஸ்டர் கிழிந்துள்ளது. இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..“திருந்திய ஓபிஎஸ், திருந்தாத இபிஎஸ்.. எல்லாமே எடப்பாடியின் பதவிவெறி !” ஓங்கி அடித்த டிடிவி தினகரன்

Follow Us:
Download App:
  • android
  • ios