சசிகலா தரப்பினர் தனக்கு லஞ்சம் தருவதாக கூறிய ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என்று டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவிற்கு சிறையில் வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து சிறைத்துறை டிஐஜி ரூபா கடந்த சில தினங்களுக்கு முன் அறிக்கை தாக்கல் செய்தார். 
இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்து விசாரணை கமிஷன் அமைக்கும் அளவிற்கு வந்து விட்டது.

தனது உயரதிகாரிகள் சசிகலாவிடம் லஞ்சம் பெற்றுதான் சலுகைகள் செய்துள்ளதாக பகீரங்கமாக கூறினார்.இதையடுத்து போக்குவரத்து ஆணையராக டிஐஜி ரூபா போக்குவரத்து துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். 

இந்நிலையில் டிஐஜி ரூபா சிறைத்துறை அதிகாரியாக இருந்த போது நடத்திய ரகசிய விசாரணையில் உண்மைகளை கண்டு பிடித்து விட்டார் என்று சசிகலா தரப்பினருக்கு தெரிந்துள்ளது.
அவர்கள் உடனே டிஐஜி ரூபாவிடம் பெரும் தொகை தருகிறோம் தயவு செய்து இதை பெரிதாக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். அதனை ரூபா அப்படியே பதிவு செய்து வைத்துள்ளாராம்.

சமயம் வரும் போது அந்த பதிவுகளை வெளியிட ரூபா முடிவு செய்துள்ளார். ஏற்கனவே இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிக்கி தவிக்கும் சசிகலா தரப்பினர் டிஐஜி ரூபா பதிவு செய்து வைத்துள்ள ஆதாரங்களை வெளியிட்டால் அதற்கும் எப்ஐஆர் போடும்  ஏற்படும் நிலை உருவாகும் என்ற கலகத்தில் உள்ளனர்.