எனது மற்றொரு கண்ணும் பார்வை பறிபோகும் முன்... பிரதமர் மோடிக்கு சாந்தனின் தாயார் கோரிக்கை
எனது மற்றொரு கண்ணும் பார்வை இழக்கும் முன்பாக எனது மகனை நேரில் பார்க்க வேண்டும், அவனுக்கு நான் சமைத்து கொடுக்க வேண்டும் என்று சாந்தனின் தாயார் பிரதமர் நரேந்திர மோடிக்கு உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தனின் தாயார் பிரதமர் நரேந்திர மோடிக்கு விடுத்துள்ள கோரிக்கையில், “இந்திய நாட்டின் பிரதமர் எனக்கும், பிள்ளை தான். என்னை தாயாக அவர் எண்ணி எனது மகன் சாந்தனை நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையை உடன் எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த சாந்தன் உள்ளிட்டவர்களுக்கு கடந்த 2022 - 10 - 22 அன்று விடுதலை அறிவித்தது இந்திய நீதிமன்றம். ஆனாலும் அவர் இன்று வரை திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுப்புக் காவலிலேயே வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சாந்தன் தன்னை தனது சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், எனது இறுதிக் காலத்தை எனது அம்மாவுடன் கழிக்க விரும்புகிறேன் எனக் கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
திருப்பூர் பேருந்து நிலையத்தில் ஹாயாக காற்று வாங்கும் ஆசாமிகள்; முகம் சுழிக்கும் பெண்கள், குழந்தைகள்
இந்த நிலையில் சாந்தனின் தாயார் எனக்கு இன்னொரு கண் பார்வையும் பரிபோகும் முன்பாக எனது மகனை பார்க்க வேண்டும். எனது கைகளால் உணவு சமைத்து மகனுக்கு உணவளிக்க வேண்டும். தனது மகனை தாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை இன்று விடுத்துள்ளார்”.
கோவையில் வியாபாரியிடம் நூதன முறையில் 1.27 கோடி கொள்ளை; 12 மணி நேரத்தில் அதிரடி காட்டிய காவல்துறை