மான்  வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர் சல்மான்கான்,தபு   உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் சல்மான் கான் தான்  குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1998 ஆம் ஆண்டு,ராஜஸ்தான் ஜோத்பூர் பகுதியில், "ஹம் சாத் சாத் ஹே"  என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன்,அக்டோபர் 1  ஆம்  தேதி இரவு  நடிகர் சல்மான் கான் 2  மான்களை சுட்டுக்கொன்றுள்ளார்.அவருடன் மற்ற  துணை நடிகர்களும் இருந்துள்ளனர்

இது தொடர்பாக  நடிகா்கள் சல்மான்கான், சைப் அலி கான், தபு, சோனாலி, பிந்த்ரே, நீலம்  ஆகியோர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜோத்பூா் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில்,  கடந்த 28  ஆம் தேதி விசாரணை முழுவதும முடித்து வைக்கப் பட்டது.

இதனை தொடர்ந்து இன்று இது குறித்த தீர்ப்பு வெளியாகு என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து. நடிகர் சல்மான் கான் உட்பட மற்ற நடிகர்களும்  நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்

இந்நிலையில், சல்மான் கான் தான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு,மற்ற சம்மந்தப்பட்ட நடிகர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது நீதிமன்றம்.