கடந்த 8ம் தேதி இரவு முதல் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. மேலும் கையில் இருப்பு உள்ள பணத்தை அனைத்து வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றி கொள்ளலாம் தெரிவித்தது. அதில், வங்கிகளில் ரூ.2500 மட்டும் பெற முடியும் என கூறியது. பின்னர், அந்த தொகை ரூ.4,500 என உயர்த்தியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதையொட்டி நாடு முழுவதும் பொதுமக்கள், வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் அதிகாலை முதல் இரவு வரை கால் கடுக்க காத்திருந்து பணத்தை மாற்றி சென்றனர்.

அதே நேரத்தில் விவசாயிகள், தங்களுக்கு தேவையான உரம், பூச்சி கொள்ளி மருந்து, விதைகள் வாங்குவதற்கு பணம் இல்லாமல் தவித்தனர். இதனால், கடந்த 9 நாட்களாக விவசாயம் பெரிய அளவில் பாதித்தது. விவசாயிகள், விவசாய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில், மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் டெல்லியில், செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது, தற்போதுள்ள பண பரிமாற்றம் குறித்த பிரச்சனையில் 7 நிபந்தனைகளை கூறினார்.

அதில் விவசாயிகள், தங்களது வங்கி கணக்கில் இருந்து ஒரு வாரத்துக்கு ரூ.25 ஆயிரம் வரை எடுத்து கொள்ளலாம். இந்த நடைமுறை நாளை முதல் அனைத்து வங்கிகளிலும் அமலுக்கு வருகிறது என்றார்.

மேலும், அதிகளவில் உரம், பூச்சி கொள்ளி மருந்து, விதை ஆகியவை வாங்குவதற்கு, வேளாண் கமிட்டியில் பதிவு செய்தவர்கள், காசோலைகளை கொடுத்து பொருட்களை வாங்கலாம் என தெரிவித்தார்.