கடந்த 8ம் தேதி இரவு முதல் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. மேலும் கையில் இருப்பு உள்ள பணத்தை அனைத்து வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றி கொள்ளலாம் தெரிவித்தது. அதில், வங்கிகளில் ரூ.2500 மட்டும் பெற முடியும் என கூறியது. பின்னர், அந்த தொகை ரூ.4,500 என உயர்த்தியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதையொட்டி நாடு முழுவதும் பொதுமக்கள், வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் அதிகாலை முதல் இரவு வரை கால் கடுக்க காத்திருந்து பணத்தை மாற்றி சென்றனர்.

வங்கிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், கருப்பு பணம் வைத்திருப்போர், பொதுமக்களை பயன்படுத்தி வங்கிகளில் மாற்றுவதாக, அரசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒருவர், ஒருமுறை மட்டும் பணம் எடுக்க வேண்டும். அவ்வாறு பணம் மாற்றம் செய்பவர்களை கண்டுபிடிக்க, அவர்ளின் கை விரலில் மை வைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி, நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில், மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் டெல்லியில், செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது, தற்போதுள்ள பண பரிமாற்றம் குறித்த பிரச்சனையில் 7 நிபந்தனைகளை கூறினார். அதில், தற்போது பொதுமக்கள் வங்கிகளில் ரூ.4500 வரை பணம் எடுக்கப்படுகிறது. அந்த விதிமுறை நாளை முதல் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி ரூ.2000 மட்டுமே வங்கியில் பணம் எடுக்க முடியும் என்பது உள்பட 7 நிபந்தனைகளை கூறினார்.