Asianet News TamilAsianet News Tamil

சபரிமலையில் திடீர் கூட்ட நெரிசல்; 35 பக்தர்கள் படுகாயத்தால் பரபரப்பு

sabarimali
Author
First Published Dec 25, 2016, 10:40 PM IST


சபரிமலையில் திடீர் கூட்ட நெரிசல்; 35 பக்தர்கள் படுகாயத்தால் பரபரப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பக்தர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் 8 பேர் கவலைக்கிடத்தில் உள்ளனர். 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகளுக்காக கடந்த நவ.,15ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. மறுநாள் மண்டல கால பூஜைகள் தொடங்கின. 41 நாள் நீடிக்கும் மண்டல காலம் திங்கள்கிழமையுடன் (நாளை) நிறைவடைகிறது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ஆரண்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து கிளம்பிய தங்க அங்கி ஊர்வலம் நேற்று பம்பை வந்தடைந்தது. தங்க அங்கியை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் கூடினர். தங்க அங்கி நேற்று மாலை 6.30 மணிக்கு மாலிகபுரம் தேவி கோயில் அருகே வந்த போது பக்தர்களிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதில் 31 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சன்னிதானம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்னர். இதில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதையடுத்து அவர்கள் அனைவரும் கோட்டயம் மருத்துவமனை கல்லூரிக்கு மாற்றப்பட்டனர்.

இது குறித்து பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் கிரிஜா கூறுகையில், “ சபரிமலை சன்னிதாம் மற்றும் மாலிகபுரம் இடையே கட்டப்பட்டு இருந்த கயிற்று தடுப்பில் பக்தர்கள் சிக்கி திடீர் நெரிசல் ஏற்பட்டது. அப்போது திடீரென தடுப்புகள் சரிந்ததையடுத்து, பக்தர்கள் சிலர் கீழே விழுந்தனர். இதையடுத்து, அடுத்தடுத்து பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சரிந்ததால், கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த பக்தரிகளில்  பெரும்பாலானவர்கள் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஆவர்'' எனத் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என கேரள மாநில தேவசம் போர்டு அமைச்சர் கடக்கம் பள்ளி சுரேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த கூட்டநெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பக்தர்கள் சன்னிதானம் செல்ல கடும் கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

 

 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios