சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக கேரளாவில் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில்  போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எந்த பெண்ணும் கோவிலுக்குள் செல்ல முடியாத வகையில் மக்கள் அங்கு பாதுகாப்பிற்கு நின்று வருகிறார்கள். மேலும் ‘எங்கள் எதிர்ப்பையும் மீறி பெண்கள் உள்ளே நுழைந்தால் ஐயப்ப கோவில் சன்னிதானத்தை இழுத்துமூடுவோம்’ என்று பந்தள மன்னர் அதிரடியாக அறிவித்தார்.

 

கொச்சியைச் சேர்ந்த ரெஹானா ஃபாத்திமா  ஓரினச்சேர்க்கையாளர் படமான 'எகா' என்ற திரைப்படத்திலும்  நடித்து பரபரப்பை கிளப்பியிருந்த இவர்  கடந்த வெள்ளிக்கிழமை சபரிமலைக்கு செல்ல முயன்றார். போலீஸ் பாதுகாப்புடன் இவர் இருமுடி கட்டி உள்ளே செல்ல முயன்றார். அவருடன் ஆந்திராவைச் சோந்த பத்திரிகையாளா கவிதாவும் சென்றார். 

ஆனால் இவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. காவல் துறையினர்  இருவரையும் பலத்த பாதுகாப்புடன் கோவிலுக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால்  ரெஹானா பாத்திமா ஐயப்ப பக்தை கிடையாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக அவர்கள் கோவிலுக்குள் செல்லாமலே திரும்பி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. கலவரம் நடப்பதை தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டது. ரெஹானா பாத்திமாவின்  இந்த செயல்  இந்தியா முழுக்க வைரலாகி உள்ளது. 

ரெஹானா பாத்திமா முஸ்லீம் என்பதால் இந்த பிரச்சனை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது, அவர் ஐயப்ப பக்தை எல்லாம் இல்லை, அவர் போராட்டம் செய்து பெயர் வாங்க வேண்டும் என்று இப்படி செய்கிறார் என்று கூறினார்கள்.  அதுமட்டுமல்ல இவர் மதம் மாறி இந்துவாகிவிட்டார் என்றும் இன்னொரு பக்கம் விவாதம் செய்யப்பட்டது.  

இந்நிலையில் தற்போது இவர் முஸ்லீம் சமூகத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். கேரளா முஸ்லீம் ஜமாஅத் கவுன்சில் இவரை அதிரடியாக நீக்கி உள்ளது. இவரது குடும்ப உறுப்பினர்களையும் நீக்கி உள்ளது. இவர் இந்து மதத்திற்கு களங்கம் விளைவிக்க முயற்சி  செய்திருக்கிறார் என விளக்கமும் அளித்துள்ளது.