சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பான மறு சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம்  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. 

அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. மேலும் கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடந்தது. வலதுசாரி அமைப்புகள், பாஜகவினர் உட்பட பலர் மிக கடுமையான போராட்டங்களை நடத்தினார்கள். இதனால் கேரளா கடந்த 4 மாதங்களாகவே பரபரப்பாக இருந்தது. 

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஏராளமான சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்டது. 

விசாரணையை தொடங்கிய நீதிபதிகள் 55 சீராய்வு மனுக்களை மட்டும் இன்று விசாரிக்க உள்ளதாகவும், 5 ரிட் மனுக்கள் பின்னர் விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். விசாரணையில் போது அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க ஆட்சேபம் இல்லை என தேவசம் போர்டு பல்டி அடித்தது. இந்நிலையில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய விரும்பினால், தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.