Russia Ukraine crisis:இந்தியர்களின் பாதுகாப்புக்கே முதலில் முன்னூரிமை.. எல்லை நாடுகள் வழியே மீட்க முடிவு- அரசு
Russia Ukraine crisis:உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க முக்கியத்துவம் வழங்குமாறு பிரதமர் தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்த்துள்ளார். மேலும் உக்ரைனின் எல்லை நாடுகள் வழியே பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
உக்ரைனில் உள்ள இந்தியர்கள், குறிப்பாக மாணவர்களை எப்படி மீட்பது என்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் லோசிக்கப்பட்டது.இதற்காக அங்குள்ள இந்தியர்கள் எந்தெந்த பகுதிகளில் உள்ளனர், அவர்களை எப்படி ஒருங்கிணைத்து மீட்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக இன்று பிற்பகலில்,உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்திய விமானம் பாதியிலேயே திரும்பியது.அந்த விமானம் கீவ் விமான நிலையம் சென்று சேர்வதற்கு முன்னரே உக்ரைன் தனது விமான நிலையங்களை சிவில் விமானப் போக்குவரத்துக்கு அனுமதியில்லை எனக் கூறி மூடியது.அந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சில நிமிடங்களில் ரஷ்ய ராணுவம் விமான நிலையத்தின் அருகே தாக்குதலைத் தொடங்கியது. இந்தச் சூழலில் ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது.
இதனால் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கேயே பாதுகாப்பாக இருக்கும்படியும், பதற்றம் அடைய வேண்டாம் என்று இந்திய அரசு தூதரகம் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.உக்ரைனில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மாற்று வழிகள் மூலம் இந்தியர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியர்களை வெளியேற்ற மாற்று நடவடிக்கை செய்யப்பட்டவுடன் உடனடியாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் இந்தியர்கள் பாஸ்போர்ட் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை எப்போது வைத்திருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவிற்கு இந்தியா அழுத்தம் தரவேண்டும் என்றும் இந்தியாவின் தீவிர ஆதரவிற்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில்,பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.பாதுகாப்பு,உள்துறை, வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனார்.
ரஷ்ய அதிபர் புதினுடன் சற்று நேரத்தில் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.இந்திய மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவது குறித்து பேசப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு முதலில் முன்னூரிமை அளிக்க பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் 20,000 இந்தியர்கள் உக்ரைனில் இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை செயலர் கூறியுள்ளார். இதில் கடந்த சில நாட்களில் 4,000 இந்தியர்கள் உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் உக்ரைனின் எல்லை நாடுகள் வழியே பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.