சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துவருகிறார். 

அதன்படி, சிறு, குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்த வங்கிக்கடன், முதலீட்டு வரம்பில் தளர்வுகள் உள்ளிட்ட 6 அருமையான சலுகைகளை அறிவித்தார். 

இதையடுத்து, நிதி நிறுவனங்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்தார். வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுக்கடன் வசதி நிறுவனங்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். 

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடியை ஒதுக்கிய மத்திய நிதியமைச்சர், அதுகுறித்து பேசுகையில், இந்தியா மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக திகழ்கிறது. அதற்கு காரணம், மின்னுற்பத்தி நிறுவனங்கள் தான். எனவே அவர்களை ஊக்குவிப்பதற்காகவும், இந்தியாவை மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக்கியவர்களுக்கு கை கொடுக்கும் விதமாகவும், மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடியை ஒதுக்குவதாக தெரிவித்தார்.