Asianet News TamilAsianet News Tamil

ரூ.100 கோடி கருப்புபணம்: 50 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு

Rs 100 crore of black money Action Income Tax raids at 50 locations
rs 100-crore-of-black-money-action-income-tax-raids-at
Author
First Published Apr 6, 2017, 8:56 PM IST


வரி ஏய்ப்பில் மூலம் ரூ.100 கோடி கருப்பு பணத்தை பிடிக்கும் வகையில், நாடுமுழுவதும் 50 இடங்களில் வருமானவரித்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

கருப்புபணத்தை தாமாக முன்வந்து தெரிவிக்கும் ‘கரீப் கல்யான் யோஜனாதிட்டம்’ கடந்த மாதம் 31-ந்தேதி முடிந்த பின், வருமான வரித்துறை நடத்தும் முதல்முதலாக நடத்தும் மிகப்பெரிய ரெய்டு இதுவாகும்.

கரீப் கல்யாண் திட்டம்

ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின், கருப்புபணம் பதுக்கியவர்கள் தங்களிடம் உள்ள பணத்தை வருமான வரித்துறையினரிடம் 45 சதவீதம் வரி, அபராதத்துடன் செலுத்த பிரதமர் கரீப் கல்யான் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் செலுத்தப்படும் பணத்தில் 25 சதவீதம் தொகை வட்டியில்லாமல் 4 ஆண்டுகளுக்கு வைப்புத்தொகையாக வைக்கப்படும்.

எதிர்பார்ப்பு

இந்த திட்டம் கடந்த ஜனவரியில் இருந்து மார்ச் 31-ந்தேதி வரை நாடுமுழுவதும் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மிகப்பெரிய அளவில் கருப்புபணம், வரி வரும் என வருமான வரித்துறையினர் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால், பெரிய அளவுக்கு தொகை ஏதும் வரவில்லை. மேலும், தாமாக முன்வந்து வருமானத்தை தெரிவிக்கும் திட்டத்தில் ரூ.67 ஆயிரத்து 382 கோடி மட்டுமே வந்தது.

திடீர் சோதனை

இந்நிலையில், பிரதமர் கரீப் கல்யான் யோஜனா திட்டத்துக்கான காலக்கெடு முடிந்த நிலையில், வரி ஏய்ப்பு செய்து கருப்புபணம் பதுக்கியவர்களின் இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

ரூ.100 கோடி

கருப்புபணம் பதுக்கியவர்கள், வரி ஏய்ப்பு செய்தவர்கள் குறித்த விவரங்களை முன்கூட்டியே திரட்டி வைத்திருந்த வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. வரி ஏய்பாளர்கள் போலி நிறுவனங்கள், கணக்குகள் மூலம் ரூ. 100 கோடிவரை பதுக்கியதாகக் கூறப்படுகிறது.

50 இடங்கள்

நாடு முழுவதும் ஏறக்குறைய 50 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. குஜராத் மாநிலம்,ஆமதாபாத் உள்ள ரியல்எஸ்டேட் நிறுவனம், ராஜ்கோட், மும்பை, டெல்லி,ஐதராபாத், உள்ளிட்ட நகரங்களில் மட்டுமே 30 இடங்களில் சோதனை நடத்திப்பட்டது. இதேபோல புனே நகரில் உள்ள முக்கிய கார்ப்பரேட்நிறுவனத்துக்கு சொந்தமான கிளைகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சோதனையில் எவ்வளவு பணம் பிடிபட்டது என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்க மறுக்கின்றனர். ஆனால், ஏறக்குறைய ரூ.100 கோடி கருப்பு பணத்தை குறிவைத்த இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ பிரதமர்கரீப் கல்யான் யோஜனா திட்டம் முடிந்துள்ள நிலையில், இனிமேல் வரி ஏய்ப்பாளர்கள், கருப்பு பணம் பதுக்கியவர்கள் மீது கடும் நடவடிக்ைகஎடுக்கப்படும், தீவிரமாக சோதனைக்கு உள்ளாவார்கள்’’ எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios