Asianet News TamilAsianet News Tamil

புதுவையில் கெத்துக்காக படுகொலை செய்யப்பட்ட ரௌடி; 7 பேர் கும்பல் வெறிச்செயல்

புதுச்சேரியில் யார் பெரிய ரௌடி என இருவேறு கோஷ்டிகள் இடையே ஏற்பட்ட மேதலில் பிளம்பர் கணேசன் என்பரை 7 பேர் கொண்ட கும்பல் மது வாங்கிக் கொடுத்து படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

rowdy ganesan killed gang war in puducherry
Author
First Published Jan 18, 2023, 4:10 PM IST

கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி அருகே குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் தமிழரசன் (வயது 32) பிளம்பர் வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்புக்கும் இடையே ஏற்கனவே முன்விரதம் இருந்ததாக கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகின்ற பிப்.27ல் இடைத்தேர்தல்

இந்த நிலையில் வீட்டிலிருந்த தமிழரசனை அப்பகுதியை சேர்ந்த கூட்டாளிகள் மூன்று பேர் காணும் பொங்கலை கொண்டாடலாம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர். சந்தேகம் அடைந்த உறவினர்கள் தமிழரசனுக்கு போன் செய்துள்ளனர். ஆனால் போனை எடுத்த வேறு ஒரு நபர் குடித்ததில் அவர் மயங்கி இருப்பதாகவும், அவரை தாங்களே வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், நீண்டநேரமாகியும் தமிழரசன் வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தமிழரசனை நேற்று இரவு முழுவதும் தேடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை அரங்கனூர் சுடுகாடு பகுதிக்கு வந்த விவசாயி ஒருவர் புதரில் ஆண் நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக பாகூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு என்ற பெயரை அவ்வளவு எளிதா மாற்றிவிட முடியாது - ஆளுநர் தமிழிசை

தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு மோப்பநாயுடன் வந்து சேர்ந்தனர். முதல் கட்ட விசாரணையில், இறந்து கிடந்தது தமிழரசன் தான் என்பதையும்,  அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் தமிழரசனும் எதிர் கோஷ்டியினரும் இரு கோஷ்டியாக செயல்பட்டு யார் பெரிய ரவுடி என்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்த கொலை நடந்திருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் இதுகுறித்து பாகூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் 7 பேர் கொண்ட கும்பல் இந்த கொலையை நிகழ்த்தி இருக்கலாம் என்று காவலர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios