Asianet News TamilAsianet News Tamil

மச்சான் மூலம் மைத்துனரை வீழ்த்த முயற்சியா? ராபர்ட் வதேராவை குறி வைத்துள்ள பாஜக!

கடந்த தேர்தலில் பாஜகவிடம் பறிகொடுத்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் முனைப்பு காட்டி வரும் நிலையில், அவரது மச்சான் ராபர்ட் வதேரா மூலம் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

robert vadra sketch... BJP
Author
Delhi, First Published Feb 8, 2019, 5:08 PM IST

கடந்த தேர்தலில் பாஜகவிடம் பறிகொடுத்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் முனைப்பு காட்டி வரும் நிலையில், அவரது மச்சான் ராபர்ட் வதேரா மூலம் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

லண்டனில் சொத்து வாங்கியது, சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட புகார்களில் சிபிஐயும், அமலாக்கத்துறையும் வதேராவை குடைந்து எடுக்கத் தொடங்கியுள்ளது. சோனியா மீதோ, ராகுல் மீதோ தனிப்பட்ட ரீதியாக பெரியளவில் எந்தக் குற்றச்சாட்டையும் முன் வைக்க முடியாததால், வதேரா விவகாரத்தை எளிதில் விடுவதாக பாஜக இல்லை. robert vadra sketch... BJP

ஒரு புறம் 3-வது அணிக்கான முயற்சியை தடுக்க ராகுல் கவனம் செலுத்தும் நிலையில், குடும்ப உறுப்பினர் மீதான புகார் அவருக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. அண்மையில் பொதுத்தேர்தல் வர உள்ள நிலையில், காங்கிரசுடன் கூட்டணி வைக்க உள்ள மாநிலக் கட்சிகள் ராபர்ட் வதேரா மீதான குற்றச்சாட்டை சாதாரணமாக நினைக்கவில்லை. robert vadra sketch... BJP

ஏற்கனவே ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க அகிலேஷ், மாயாவதி, மம்தா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், வதேரா மீதான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் கிடுக்கிபிடி காங்கிரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. அவ்வப்போது வதேரா மீது பாஜக செய்தி தொடர்பாளர்கள் பரபரப்பு புகார் கூறுவதும் பின்னர் அமைதிகாப்பதும் கடந்த 4 ஆண்டுகால வரலாறு. robert vadra sketch... BJP

ஆனால் ப்ரியங்கா காந்திக்கு கட்சியில் பொறுப்பு அளிக்கப்பட்டவுடன், வதேரா விவகாரம் விஸ்பரூபம் எடுத்திருக்கிறது. ரபேலை வைத்து காங்கிரசும், வதேராவை வைத்து பாஜகவும் பரஸ்பர குற்றச்சாட்டை முன் வைக்கிறது. இதனால் யாருக்கு வாக்கு அறுவடை கிடைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios