Right to information act
தகவல் உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு…மத்திய அரசு தீவிரம்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதாவது, ஒரு மனுவில் 500 வார்த்தைகள் இருக்க கூடாது, தகவல் தர அதிகான கட்டணம் உள்ளிட்டவற்றை புகுத்த இருக்கிறது.
இந்த திருத்தத்தின்படி, அரசு துறைகள் தகவல் தர மறுத்தால், அது குறித்து ஆன்-லைனில் மட்டுமே புகார் தெரிவிக்க வேண்டும் என திருத்தப்படுகிறது.
நாட்டில் ஏராளமான மக்களுக்கு இணையதள சேவை கிடைக்காத நிலையில், இந்த விதியை கொண்டு வருகிறது.
இது குறித்து தகவல் பெறும் உரிமைச்சட்ட ஆர்வலர் லோகேஷ் பத்ரா கூறுகையில், “ அரசு துறைகளிடம் இ ருந்து தகவல்களை பெறுவதை கடினமாக்க வேண்டும், மக்களைக் காட்டிலும் அரசு வலிமையானதாக இருக்க வேண்டும் என அரசு நினைத்து விட்டது.
அதனால், தான் இதுபோன்ற புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. 500 வார்த்தைகளுக்கு மிகாமல் மனுவில் குறிப்பிட வேண்டும். அவ்வாறு அதிகமாக இருந்தால், அதை நிராகரிக்க அதிகாரிக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இந்த திருத்தங்கள் குறித்து வரும் 15ந் தேதிக்குள் மக்கள் கருத்துக்கள் அளிக்க பணியாளர் மற்றும் பயிற்சித்துறை இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த புதிய திருத்தத்தில் மனு அனுப்பி விவரம் கேட்கும் பொதுமக்களே தபால்தலை செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போது அரசு தபால் செலவை ஏற்றுக்கொள்ளும் நிலையில், இனி, தகவல் கேட்பவரே தபால் கட்டணத்தை ஏற்க வேண்டும்.
தகவல் கேட்பவர் கையால் விண்பத்தை பூர்த்தி செய்து இருந்தால், அதை நிராகரிக்கவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல், அனைத்து மேல்முறையீடுகளும் ஆன்-லைனில்தான் இருக்க வேண்டும் என்பது சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கும், கல்வி அறிவு இல்லாதவர்கள், கிராம மக்களை இது கடுமையாக பாதிக்கும்.

காங்கிரஸ் அரசு கொண்டு வந்ததில் மிக முக்கியமான சட்டம் தகவல் பெறும் உரிமைச்சட்டமாகும். சமானியர் ஒருவர் அரசே இந்த சட்டத்தின் மூலம் கேள்வி கேட்டு, தகவல்களை பெற முடியும். கடந்த 2015-16ம் ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 1 கோடி பேர் தகவல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
தகவல்களை தவறாக அதிகாரிகள் அளித்தால் அது குறித்து மேல் முறையீடு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு பதில் மனுவும் அதிகாரிகள் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது 30 நாட்களுக்குள் ஒரு நபர் மேல்முறையீடு செய்யலாம் இந்த காலக்கெடு இப்போது 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு பதிப்பகங்களான பொருளாதார ஆய்வறிக்கை, தேசிய சாம்பிள் சர்வே புள்ளிவிவரங்கள் ஆகியவை இனி ரூ.10க்கு கிடைக்காது. ஒவ்வொரு பக்கத்தையும்ஜெராக்ஸ் எடுக்க ரூ.2 கட்டணமும் விதிக்கப்படும்.
