புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. திடீரென மத்திய அரசு அறிவித்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் ஒட்டு மொத்த இந்தியாவே ஸ்தம்பித்தது. இதனால் பணப்புழக்கம் குறைந்து பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
இதனால், தவணை முறைகளில் கடன் வாங்கியவர்கள் சம்பளம் கைக்கு கிடைக்குமா கிடைக்காதா என வேதனைபட்டு வந்த நிலையில், வீட்டு கடன் மற்றும் கார் கடன்களை செலுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.
அதாவது 1 கோடி ரூபாய்க்கும் குறைவாக உள்ள கடன் தொகைக்கு 60 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும். பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மூலம் தவணை செலுத்த அனுமதி வழங்கியுள்ளது ரிசர்வ் வங்கி.
