செல்லாத ரூபாய் நோட்டுகளை  மாற்ற அவகாசம் நீட்டிப்பு… ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு

வெளிநாடு வாழ் இந்தியர்கள் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஜூன் மாதம் வரையில் ரிசர்வ் வங்கி கிளை அலுவலகத்தில் கொடுத்து மாற்றிக் கொள்ள அவகாசம் அளித்து  ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது.

மார்ச் 31 வரை

 நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் அறிவிக்கப்பட்டது. மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் டெபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. மக்கள் அதன்படி டிசம்பர் 30-ம் தேதி வரையில் வங்கிகளில்டெபாசிட் செய்தனர். இதனையடுத்து மார்ச் மாதம் இறுதி வரையில் ரிசர்வ்வங்கியின் கிளை அலுவலகத்தில் உரிய விளக்கம் அளித்து மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்ற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

புதியஅறிவிப்பு

இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி கால அவகாசம் வழங்கி உள்ளது. 

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-

ஜூன் 30வரை அவகாசம்

இந்தியாவில் வசிப்பவர்கள், நவம்பர் 9 முதல் 2016 டிசம்பர் 30-ம் தேதி வரையில் வெளிநாட்டிற்கு சென்று இருந்தால் அவர்கள் ஜூன் 30-ம் தேதி வரையில் தங்களிடம் உள்ள செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்  இவர்களுக்கு எந்தஒரு பண வரம்பும் கிடையாது. ஆனால் வெளிநாடுவாழ் இந்தியர்கள்  இந்தியாவின் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் நெறிமுறைகளின்படி மாற்றிக் கொள்ளலாம்.

ரூபாய் நோட்டை மாற்ற வருபவர்கள், நவம்பர் 9ந்தேதி முதல் டிசம்பர் 30-ந்தேதிவரை இந்தியாவில் இல்லை வெளிநாட்டில் தங்கி இருந்தேன் என்பதற்கான ஆவணங்கள், அடையாள அட்டை, பாஸ்போர்ட், உள்ளிட்டவற்றை ரிசர்வ் வங்கி அதிகாரியிடம் அளிக்க வேண்டும். இந்த வசதி மும்பை, புதுடெல்லி, சென்னை,கொல்கத்தா மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைகளுக்கு மட்டும் பொருந்தும்.

அனுமதியில்லை

ஆனால் நேபாளம், பூடான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் வாழும் இந்தியர்களுக்கு இந்த அறிவிப்பானது பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.