PM Modi in Mann Ki Baat: மஞ்சப்பை இருக்கு! பிளாஸ்டிக் எதுக்கு? பிரதமர் மோடி மன் கீ பாத் உரையில் வேண்டுகோள்
பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்துமாறு நாட்டு மக்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
98வது மன் கி பாத் வானொலி உரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணி பைகளுக்கு மாறவேண்டும் என்று வலியுறுத்தினார். கழிவிலிருந்து வளங்களை உருவாக்குதல் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் முக்கிய பரிமாணமாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர் நாம் தீர்மானித்தால், தூய்மையான இந்தியாவை நோக்கி மிகப்பெரிய பங்களிப்பை வழங்க முடியும் எனவும் கூறினார்.
"ஹரியானாவில் துல்ஹெடி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள இளைஞர்கள் பிவானி நகரத்தை தூய்மையில் முன்னுதாரணமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர். அவர்கள் ஒரு அமைப்பை உருவாக்கினர். அந்தக் குழுவின் இளைஞர்கள் பிவானிக்கு அதிகாலை 4 மணிக்கே சென்று பல்வேறு தூய்மைப் பணிகளைச் செய்கின்றனர். இவர்கள் இதுவரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் குப்பைகளை அகற்றியுள்ளனர்" என்று பிரதமர் பாராட்டினார்.
பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெற திட்டமிட்டிருந்த தமிழர் உள்பட இருவர் கைது
ஒடிசாவின் கேந்திரபாடா மாவட்டத்தில் உள்ள ஒரு மகளிர் சுய உதவி குழுவை நடத்திவரும் கமலா மோஹரானாவை குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, "இந்த சுயஉதவிக் குழுவின் பெண்கள் பால் பாக்கெட்டுகள் மற்றும் இதர பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து கூடைகள், மொபைல் ஸ்டாண்டுகள் போன்றவற்றைத் தயாரிக்கிறார்கள்" என்றார்.
"மன் கி பாத் நிகழ்ச்சியில் இந்திய பொம்மைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறோம். எனது சக குடிமக்களும் அவற்றை ஊக்கப்படுத்தி வருகின்றனர். தற்போது வெளிநாடுகளிலும் இந்திய பொம்மைகளின் தேவை அதிகரித்துள்ளது. இந்திய பொம்மைகள் மீதான மோகத்தைக் காணமுடிகிறது" என்று குறிப்பிட்டார்.
Priyanka Gandhi: பிரியங்காவுக்கு 6000 டன் ரோஜா இதழ்களால் ரோஸ் கார்பெட் வரவேற்பு!
தொடர்ந்து பேசிய அவர் "இந்திய பாணியிலான கதை சொல்லும் பற்றியும் நாம் பேசியிருக்கிறோம். அதன் புகழ் வெகுதூரம் சென்றிருக்கிறது. உலக மக்கள் இந்திய கதை சொல்லும் பாணியை மேலும் மேலும் ரசிக்கத் தொடங்கியுள்ளனர்" என்றார்.
ஹோலி பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு ஹோலி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 'உள்ளூர் மக்களுக்கான குரல்' என்ற நோக்கத்துடன் இந்த ஹோலி பண்டிகை கொண்டாடப்பட வேண்டுவோம். இந்தப் பண்டிகையில் உங்களுடைய அனுபவங்களை மறக்காமல் என்னிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.
'மன் கி பாத்' என்ற பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி உரை, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகிறது. வரும் ஏப்ரல் மாதம் 100வது 'மன் கி பாத்' உரையை நிகழ்த்த உள்ளார்.