Hathras Stampede : ஹத்ராஸ் நகர மத நிகழ்வு.. கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

Uttar Pradesh : உத்தரபிரதேசத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நகரம் தான் ஹத்ராஸ். அங்கு இன்று நடந்த ஒரு மத நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Religious event in uttar pradesh hathras many feared dead in stampede ans

நமது இந்திய நாடு ஆங்கிலேயரிடம் சிக்கி இருந்த பொழுது, பிரிட்டிஷ் ராஜ் இயக்கம் இந்தியாவின் பல பகுதிகளில் தங்களுடைய தொழில் நிறுவனங்களை நிறுவி வந்தனர். அதற்கு தலைநகரங்களாக பல இடங்கள் செயல்பட்டு வந்தது. அப்படி பிரிட்டிஷ் ராஜ் காலத்தில் ஆங்கிலேயர்களின் தொழில் துறை மையமாக விளங்கிய நகரம் தான் ஹத்ராஸ். 

இந்நிலையில் இன்று ஜூலை 2ம் தேதி, ஹத்ராஸ் நகரில் நடைபெற்ற ஒரு மத கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, சுமார் 107 பேர் இறந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. குவியல் குவியலாக பலரது உடல்கள் லாரிகள் மற்றும் பஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டுவந்த வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது.

சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை; டெல்லி ஆளுநர் தொடர்ந்து வழக்கில் தீர்ப்பு!

"மேலும் காயமடைந்த பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணைக்கு பிறகே கூடுதல் விவரங்கள் தெரியவரும். மத நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலே இந்த இறப்புக்கு முதன்மையான காரணம்" என்றார் அவர். வெளியான தகவலின்படி, ஆக்ரா ADG மற்றும் அலிகார் கமிஷனர் அடங்கிய குழு இந்த சம்பவத்திற்கான காரணத்தை விசாரிக்க சம்ப இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, இது தொடர்பான நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பக்க பதிவில்.

ஹத்ராஸ் மாவட்டத்தில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். 

உனக்கு யார் சம்பளம் கொடுக்குறா? சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்த ஆந்திர அமைச்சரின் மனைவி - வைரல் வீடியோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios