இந்தியாவின் அடையாளமே ஆதார் என்ற நிலைப்பாடு தான் தற்போது உருவாகி உள்ளது. அந்த வகையில் ஒரு தனி மனிதனின் அடையாளமாக ஆதார் விளங்குகிறது 

இந்நிலையில் தனி மனித ரகசியத்தை உள்ளடக்கிய ஆதார் அனைத்து இடத்திலும் பயன்படுத்துவது  சரியல்ல என்றும், தனி  மனித ரகசியத்தை காப்பது அடிப்படை  உரிமை என்றும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் சென்ற வாரம், தனி மனித ரகசியத்தை காப்பது அடிப்படை உரிமை தான்  என  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக பல்வேறு பயன்பாட்டிற்கு  ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நாளை முடிவடைய இருந்த நிலையில்  தற்போது  அதற்கான கால அவகாசத்தை  டிசம்பர் 31   ஆம்  தேதி  வரை  நீட்டித்து உள்ளதாக  மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் கூறப்பட்டதற்கு, மத்திய அரசு வழக்கறிஞர் விளக்கம் கொடுத்தார். அதாவது காலக்கெடு அதிகரித்து  உள்ளதால், அவசர வழக்காக இந்த வழக்கை விசாரிக்க வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார்.

எனவே தனி நபர் ரகசியம் காப்பது  அடிப்படை  உரிமை என்றால், எதற்காக  அனைத்திலும்  ஆதார்   எண்ணை இணைக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதில் டிசம்பர் 31 ஆம் தேதி தான் தெரியும்  என்பது  குறிப்பிடத்தக்கது.

மேலும்  இது குறித்த விசாரணையை  நவம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது