நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள் தோறும் உயர்த்தப்படும். சமையல் எரிவாயுவின் விலையை மாதம்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றனர். இந்நிலையில், மாதத்தின் முதல் நாளையடுத்து இந்த விலை மாற்றத்தை அறிவித்துள்ளது.  

இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலையை நிர்ணயித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.62.50 வரை குறைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. மானியமில்லாத சமையல் எரிவாயு விலை புதன்கிழமை சர்வதேச விகிதங்களை மென்மையாக்குவதில் சிலிண்டருக்கு ரூ .62.50 குறைக்கப்பட்டது. 
 
மானிய விலை 14.2 கிலோ எடை கொண்ட மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 62 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டு, 590 ரூபாய் 50 காசாக நிர்ணயம் செய்யப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வரும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது.

மானியமற்ற சிலிண்டரின் விலை 2019 ஜூலை மாதத்தில் ரூ .100.50 காசுகள் குறைக்கப்பட்டிருந்தது. இரண்டு மாதங்களில் மானியமற்ற சிலிண்டரின் விலை மொத்தம் ரூ.163.00 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணையதளத்தில் மானியத்துடன் கூடிய சிலிண்டரின் விலை பற்றிய தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. இதனால் இனி வரும் காலங்களில் வீட்டு உபயோக சிலிண்டருக்கான மானியம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.