Asianet News TamilAsianet News Tamil

ரெட் அலார்ட் வாபஸ்.... பெருமூச்சு விடும் கேரள மக்கள்; வானிலை மையம் கூறுவது என்ன?

கேரளாவில் தொடர்ந்து கனமழை காரணமாக விதிக்கப்பட்ட  ரெட் அலார்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கேரளாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்ட ரெட் அலார்ட் எனப்படும் தீவிர கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் திரும்பப் பெற்றுள்ளது.

Red Alert Withdrawn From All Districts Of Kerala
Author
Kerala, First Published Aug 19, 2018, 11:50 AM IST

கேரளாவில் தொடர்ந்து கனமழை காரணமாக விதிக்கப்பட்ட  ரெட் அலார்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கேரளாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்ட ரெட் அலார்ட் எனப்படும் தீவிர கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் திரும்பப் பெற்றுள்ளது. ஆனால் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலார்ட் எனப்படும் மிதமான மழை வாய்ப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2 மாவட்டங்களுக்கு எல்லோ அலார்ட் எனப்படும் லேசான மழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.Red Alert Withdrawn From All Districts Of Kerala

மழையின் தாக்கல் குறைந்ததையடுத்து மீட்டு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் மண்சரிவு மற்றும் மழையில் சிக்கி இதுவரை 10 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இருப்பினும் மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதுவரை 370-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். Red Alert Withdrawn From All Districts Of Kerala

இந்நிலையில் கேரளாவில் மழை சற்று குறைந்திருப்பதால் பேருந்துகள் இன்று சீராக இயக்கப்டப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் முக்கிய இடங்களான எர்ணாகுளம், கோட்டையம், திரிச்சூர், பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் பேருந்து சேவை தொடங்க உள்ளது. முதற்கட்டமாக இன்று மாலை பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios