தெலங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள பசமைலாரத்தில் சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ஏற்பட்ட ரியாக்டர் வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தெலங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள பசமைலாரத்தில் சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு பல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ரியாக்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. 

ரியாக்டர் வெடித்து விபத்து

இதில் பணியில் இருந்த தொழிலாளர்கள் சினிமா பாணியில் 100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை வெளியேறியது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 20 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தியணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

10 பேர் பலி

இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். மிக பலத்த வெடிப்பு காரணமாக சுற்றியுள்ள கட்டிடங்கள் குலுங்கியதாகவும்,, தொழிற்சாலையின் சில பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.