RBI launches new batch of Rs 500 notes

மகாத்மா காந்தி உருவபடத்துடன், புதிய வகை ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.

நாட்டில் கருப்பு பணம் , ஊழலை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.1000, ரூ.500 நோட்டுகளை தடை செய்து அறிவித்தார்.அதைத் தொடர்ந்து 17 பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளையும், ரூ.500 நோட்டுகளையும் அறிமுகம் செய்து மக்களுக்கு புழக்கத்தில் விட்டது. 

இந்த நோட்டுகள்தான் இப்போது மக்களிடையே பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், ரூ.50, ரூ.20, ரூ.5 ரூ.1 நோட்டுகளையும் அச்சடித்து விரைவில் வெளியிடப்போவதாக ரிசர்வ் வங்கி கூறிவந்தது.

இந்நிலையில், புதிய வடிவிலான, பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ரூ.500 நோட்டுகளை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. 

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

மகாத்மா காந்தி உருவப்படம் பதித்த ரூ.500 நோட்டுகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் புதிதாக ரூ.500 நோட்டில் “A” என்ற எழுத்து 500 என்ற எண்ணுக்கு அருகே அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கையொப்பம் இருக்கும். ரூபாய் நோட்டின்பின்புறம், ரூபாய் நோட்டு அச்சிடப்பட்ட 2017ம் ஆண்டு குறிப்பிடப்பட்டு இருக்கும். ஏற்கனவே வெளியான ரூ.500 நோட்டில் என்ன பாதுகாப்பு அம்சங்கள் இருந்ததோ அதே அம்சங்கள் இதிலும் இருக்கும். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.