சரண்டர் ஆன சிவசேனா எம்.பி….ஏர் இந்தியா மேனஜரை தாக்கியதற்கு மன்னிப்புக் கேட்டார்…

ஏர் இந்தியா விமானத்தில் அதன் ஊழியரை சிவசேனா எம்.பி. ரவீந்திரா கெய்க்வாட், செருப்பால் அடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்  மத்திய அமைச்சருக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்தார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திரா கெய்க்வாட், கடந்த மார்ச் 23-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த போது விமான ஊழியரை 25 முறை  செருப்பால் அடித்ததாக புகார் எழுந்தது.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஏர் இந்தியா உள்பட 7 விமான நிறுவனங்கள் விமான நிறுவனங்கள் ரவீந்திர கெய்க்வாட் விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்தன.

ஏர் இந்திய முடிவு சரியானது தான் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜூவும் தெரிவித்தார். ரவீந்திர கெய்க்வாடும் பல முறை விமானத்தில் பயணம் செய்ய முயன்றும் விமான சேவை நிறுவனங்கள் அவரக்கு தடை போட்டன. இதன்ல் அதிர்ச்சி அடைந்த அவர், இப்பிரச்சனையில் இருந்து வெளியேற முயன்றார்.

இந்நிலையில் சிவசேனா எம்பிக்கள் குழு ஒன்று இது தொடர்பாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன்ஐ சந்தித்து பேசியது. அப்போது, இதுபோன்ற ஒரு சம்பவம் இனி எதிர்காலத்தில் நடக்காது என ரவீந்திர கெயிக்வாட் உறுதி அளித்தால், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க உதவும் வகையில் இந்த பிரச்சினையில் அரசு தலையிட முடியும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவன மேலாளரை அடித்ததற்கு வருத்தம் தெரிவித்து சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக் கஜபதி ராஜூவுக்கு சிவசேனா எம்.பி. ரவீந்திர கெயிக்வாட் கடிதம் எழுதி உள்ளார்.

அதில், நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது என்றும் இதற்காக . தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தனக்கு விமானத்தில் பயணிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.