ஜனாதிபதியாக ராம் நாத் கோவிந்த் பதவி ஏற்று 3 வாரங்களில் 6 முக்கியச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து கையொப்பம் இட்டுள்ளார்.

இதில் கடல்சார் தொடர்பான வழக்கில் விசாரணை வரம்பை விரிபடுத்துதல், கைது மற்றும் கப்பல்களை சிறைப்பிடித்தல் உள்ளிட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. இந்த 6 சட்டங்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலைப் பெற்றன.

கடல்சார் தொடர்பான கோரிக்கைகள், விசாரணை வரையறைகளை விரிவுபடுத்துதல் சட்டம் 2017 என்ற சட்டம், மாநிலங்கள் அவையில் ஏப்ரல் 24ந்தேதியும், மக்களவையில் மார்ச் 10-ந்தேதியும் நிறைவேறியது.

குழந்தைகளுக்கு இலவசம் மற்றும் கட்டாயக் கல்வி திருத்தச்சட்டம் 2017. இந்த சட்டத்துக்கு மாநிலங்கள் அவை ஆகஸ்ட் 1-ந்தேதியும், மக்களவை ஜூலை இறுதியிலும் ஒப்புதல் அளித்தன.

புள்ளிவிவரங்கள் சேகரிப்பு திருத்த சட்டம், ஐ.ஐ.ஐ.டி. இந்திய தேசிய தொழில்நுட்ப நிறுவனம், அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவன திருத்த மசோதா, காலனி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவன மசோதா ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.