Ramar temple
‘வனவாசம் முடிந்தது; விரைவில் ராமர் கோவில் கட்டப்படும்’
உ.பி. தேர்தல் முடிவு பற்றி சிவசேனா கருத்து
உத்தரப் பிரதேச தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜனதாவுக்கு பாராட்டு தெரிவித்த சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத், ‘‘வனவாச காலம் முடிந்துவிட்டதால் அங்கு விரைவில் ராமர் கோவில் கட்டப்படும்’’ என நம்பிக்கை தெரிவித்தார்.
‘‘5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. பா.ஜனதா வெற்றியை வரவேற்கிறோம். இந்த வெற்றிக்காக பிரதமர் மோடிக்கும் எங்களுடைய பாராட்டுகள்.
தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் (சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி) மோடி அலையை மும்பைக்குள் நுழைய விடாமல் தடுத்த சிவசேனாவின் முக்கியத்துவத்தை இப்போது புரிந்து கொண்டு இருப்பார்கள்’’ என்றும் அவர் மேலும் கூறினார்.
