Raman kidnapped Sita?
ராமாயணத்தில் சீதையைக் கடத்தியது யார் என்று கேட்டால் ராவணன் என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால், குஜராத்தில் 12 ஆம் வகுப்பு சமஸ்கிருத பாடத்தில் சீதையைக் கடத்தியது ராவணன் என்பதற்கு பதிலாக, ராமர் என்று குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு சமஸ்கிருத பாடத்தில் கவிஞர் காளிதாஸ், ரகுவம்சம் என்ற பகுதியில் 106-வது பக்கத்தில் கவிதை ஒன்று எழுதப்பட்டுள்ளது.
சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்ட இந்த கவிதையில் பல தவறுகள் இருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதில் சீதையைக் கடத்தியது ராவணன் என்பதற்கு பதிலாக ராமன் என்று அச்சிடப்பட்டுள்ளது. அதிலும் கடத்தப்பட்டார் என்பதற்கு பதிலாக, அழித்துவிட்டார் என்ற மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து குஜராத் மாநில பட்ளளி பாடநூல் கழக தலைவர் நிதின் பதேனி கூறும்போது, 12 ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் ராமாயண பாடத்தில் தவறு ஏற்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறோம்.
மொழிபெயர்ப்பாளர்கள் தவறாக மொழிப்பெயர்த்த வார்த்தையைத் திருத்தம் செய்பவர்களும் பார்க்கத் தவறிவிட்டனர். இந்த தவற்றை சரி செய்யக்கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தேவைப்பட்டால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
குஜராத் மாநில காங். கமிட்டியின் செய்தி தொடர்பாளர் மணிஷ் தோஷி கூறும்போது, மாநில அரசின் பள்ளிப்பாட வாரியம் தொடர்ந்து இதுபோன்று மன்னிப்பு கேட்டுக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிப்பாட புத்தகத்தில் ஏராளமான தவறுகள் வருகின்றன.

இதைச் சுட்டிக்காட்டும்போது அரசு ஏற்றுக்கொண்டு சரி செய்வதாக கூறுகிறது. ஆனால் இந்த தவறுகள் சாமானிய மக்களுக்குத் தெரிவதில்லை. ஒருவேளை சீதையைக் கடத்தியது ராமர்தான் என்று மாணவர்கள் படித்து உண்மை என்று நம்பியிருந்தால், வரலாற்றுப்பிழை ஏற்பட்டிருக்கும் என்றா
