ராஜஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்தில் இருந்த 35 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

 

கடந்த சில நாட்களுக்கு டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எனப்படும் வெயில் அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதிலும் வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. குறிப்பாக உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதியில் வரலாறு காணாத அளவு 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது.

 

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், போடியானா என்ற கிராமத்தை ஒட்டியுள்ள ஆற்றில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த ஆற்று வெள்ளத்தில், அந்த வழியே சென்ற பேருந்து ஒன்று சிக்கியது. வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்தில் இருந்த பயணிகளை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். இதனால், பெருத்த உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.