ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 350 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மவுண்ட் அபுவில் 773 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது.

இந்த கனமழையால் அதிக உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது. மேற்கு வங்கம், குஜராத், மஹாராஸ்டிரம், பீகார், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குஜராத் மற்றும் ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த வரலாறு காணாத கன மழை வரும் புதன் கிழமை வரை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில், குஜராத் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் புதன் கிழமை வரை கனமழையே நீடிக்கும் எனவும், குஜராத்தின் பல்ந்த்புர்ஹிம்மத் நகரை சேர்ந்த மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 350 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மவுண்ட் அபுவில் 773 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சென்னை வெள்ளத்தின் போது தாம்பரத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி வெறும் 494 மி.மீ மழைதான் பதிவானது என்பது குறிப்பிடதக்கது.