Asianet News TamilAsianet News Tamil

திருமண நாள் காலையில் மணப்பெண்ணுக்கு கொரோனோ... தடுப்பு உடை அணிந்து தாலி கட்டிய மாப்பிள்ளை..!

ராஜஸ்தானில் மணமகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதுகாப்பு உடை அணிந்து தாலி கட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

Rajasthan bride tests corona positive, but gets married
Author
Rajasthan, First Published Dec 7, 2020, 7:17 PM IST

ராஜஸ்தானில் மணமகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதுகாப்பு உடை அணிந்து தாலி கட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் ஷாபாத் நகரில் பரா பகுதியில் ஒரு ஜோடிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், திருமண நாள் காலையில் மணப்பெண்ணுக்கு கொரோனோ பாசிட்டிவ் என்று தெரிய வந்தது. அவரை உடனே தனிமை படுத்தியாக வேண்டும், திருமணமே நடக்காது என்ற என்ற சூழல் ஏற்பட்டது. அதனால் கல்யாணப்பெண் மணமுடைந்து போனார்.

Rajasthan bride tests corona positive, but gets married

ஆனால் மாப்பிள்ளை விடவில்லை. என் மனைவி இவள்தான். அதுவும் இன்றே திருமணம் செய்வேன் என்று முடிவு எடுத்தார். இரண்டு குடும்பத்தார்களும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர். அவர்கள் மாவட்ட சுகாதார அதிகாரியை சந்தித்து பேசினார்கள். பின்பு அவரது சம்மதத்துடன், கொரோனோ தனிமை மையத்திலேயே மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் முழு கொரோனோ தடுப்பு உடையை அணிந்துக்கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.

Rajasthan bride tests corona positive, but gets married

மாப்பிள்ளையும் மணப்பெண்னும் மட்டுமில்லாமல் அவர்களின் பெற்றோர்களும் சடங்குகள் நடத்தும் புரோகிதரும் முழு கொரோனோ தடுப்பு உடைகளை அணிந்துக்கொண்டனர். அந்த உடையுடனே புரோகிதர் மந்திரங்கள் சொல்லி சடங்குகள் செய்ய, அந்த தடுப்பு உடையுடனே மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் மாலை மாற்றிக்கொண்டார்கள். மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலியும் கட்டினார். கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து நடத்தப்பட்ட இந்த திருமணம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios