மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.64,587 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் ஒழிக்கப்பட்டு உள்ளதாக, பட்ஜெட்டில் கோயல் கூறினார். 

பொது பட்ஜெட்டுடன் இணைந்து ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையை 2017-ம் ஆண்டு மோடி அரசு நடைமுறைப்படுத்தியது. இந்த வருடமும் அதே நடைமுறையை செயல்படுத்தப்பட்டது. மக்களவை தேர்தல் வர உள்ளதாலும், பாஜக தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதாலும் எதிர்பார்புகள் நிறைந்திருந்தன. இந்த பட்ஜெட்டை ரயில்வே துறை அமைச்சரும், இடைக்கால நிதி அமைச்சருமான பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.

 

ரயில்வே துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.6 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆளில்லாத ரயில்வே கிராசிங் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வரலாற்றிலேயே கடந்த ஆண்டுதான் விபத்துகள் குறைவாக நடந்திருப்பதாகவும் தெரிவித்தார். பாதுகாப்புத்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் நிதி ஒதுக்கப்படும் என்றார். புதிய ரயில்கள் குறித்தோ, கட்டண உயர்வு குறித்தோ அவர் தெரிவிக்கவில்லை.