Railway online recruitment tests save 319 crore A4 size sheets
ரெயில்வே துறை ஆன்-லைன் மூலம் தேர்வுகள் நடத்தியதால், ஏறக்குறைய 319 ஏ.4சைஸ் பேப்பர், 4 லட்சம் மரங்கள் அழியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக, பல மொழிகள் கொண்ட புத்தகம் மாதிரியான கேள்வித்தாள் மூலமே தேர்வுகள் நடக்கும். தேர்வு நடத்தி, வேலைக்கு ஊழியர்ளை எடுப்பதற்கு கோடிக்கணக்கான காகிதம் வீணாகும்.
இதை தவிர்க்கும் வகையில் சமீபத்தில் ஆன்-லைன் மூலம் தேர்வு நடத்த முடிவு எடுக்கப்பட்டது. ரெயில்வே துறையில் உள்ள 14 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்காக சமீபத்தில் 3 கட்டத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் எழுத்துத்தேர்வு, மனநிலைதேர்வு, டைப் செய்தல் தேர்வு ஆகியவை நடத்தப்பட்டன.
இந்த தேர்வுகள் மூலம், ரெயில்வே துறைக்கு 319 கோடி ஏ.4சைஸ் பேப்பர் பயன்பாடு குறைக்கப்பட்டது, பேப்பர் உற்பத்திக்காக 4 லட்சம் மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட்டது.

இதில் தேர்வில் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில்,ரெயில்வே 315 மையங்களில் ஆன்-லைன் முறையில் தேர்வுகளை நடத்தியது. இதில் 92 லட்சம் பேர் தேர்வு எழுதினர். முதனிலைத் தேர்வுக்கு 2.73 லட்சம் பேர் தகுதி பெற்றனர். அவர்களுக்கு கடந்த ஜனவரி 17 மற்றும் 19-ந்தேதிகளில் ஆன்-லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.
ஏறக்குறைய 45 ஆயிரம் பேர், 3-வது மற்றும் இறுதித் தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு உளவியல், டைப்பிங் தேர்வு ஆகியவை கடந்த மாதம் 29, 30ந் தேதிகளில் நடந்தது.

அனைத்துத் தேர்வுகள் டிஜிட்டல்முறையில் நடத்தப்பட்டதால், ஒரே நாளில் நடத்தி முடிக்கப்பட்டது.
இதுவே பழைய முறைப்படி நடத்தப்பட்டு இருந்தால், 2 மாதங்கள் காலம் எடுத்து இருக்கும். ஆன்-லைன் மூலம் தேர்வு நடத்தப்படுவதன் மூலம் நேரமும், காகிதமும் சேமிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளும் வௌிப்படைத்தன்மையுடன் நடந்துள்ளது.
ரெயில்வே தேர்வுகளில் கேள்வித்தாள் வௌியாகி சர்ச்சை உருவானதையடுத்து, கேள்வித்தாள் மூலம் நடத்தப்படும் தேர்வுகளை ரத்து செய்து, ஆன்-லைன் மூலம் தேர்வுகளைரெயில்வே நடத்தி வருகிறது.
