ஆன்லைன் மூலம் ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்கு சேவை கட்டணம் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்ததாஸ் தெரிவித்தார்.

மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்ததாஸ் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து கொண்டு இருக்கிறார்.

இதில், அனைத்து கிராமங்களிலும் 1.5 லட்சம் தபால் நிலையங்களில் பணம் மாற்றப்பட்டுள்ளது என கூறினார். மேலும், ரயில்வே முன் பதிவுக்கு, ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு வரும் டிசம்பர் 31ம் தேதி வரை சேவை கட்டணம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.