டைம்ஸ் நவ் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ராகுல் ஷிவ்சங்கர், செய்தி சேனலில் இருந்து திடீரென ராஜினாமா செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
டைம்ஸ் நவ் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ராகுல் ஷிவ்சங்கர் செய்தி சேனலில் இருந்து திடீரென ராஜினாமா செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
நியூஸ்எக்ஸின் தலைமை ஆசிரியர் பதவி வகித்து வந்த ராகுல் ஷிவ்சங்கர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2016ம் ஆண்டு டைம்ஸ் நவ் குழுவில் இணைந்தார். பின்னர், ப்ரைம் டைம்மில் 8 மணி விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதனால், அவர் மிகவும் பிரபலமானார். மேலும் 13வது ENBA விருதுகளில் சிறந்த பிரைம் டைம் ஷோவை வென்றார். இந்தியா அப்ஃப்ரன்ட்டைத் தவிர, தி பிரேக்கிங் நியூஸ் ஷோ மற்றும் லைவ் ரிப்போர்ட் மற்றும் ஒரு மணி நேர வார இறுதி நிகழ்ச்சியான கான்ஃப்ரண்ட் உள்ளிட்ட நான்கு நிகழ்ச்சிகளையும் சிவ்சங்கர் தொகுத்து வழங்கி வந்தார்.

இந்நிலையில், டைம்ஸ் நவ் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ராகுல் ஷிவ்சங்கர், செய்தி சேனலில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். இவர் விலகியதற்கான காரணமும் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த லைவ் நிகழ்ச்சியின் போது ராகுல் ஷிவ்சங்கர் கோபமாக பேசி சண்டை போட்டதன் காரணமாக விலகியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டைம்ஸ் நவ் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ராகுல் ஷிவ்சங்கர் விலகியதாக தனது ஊழியர்கள் அனைவருக்கும் தலைமை தகவல் அனுப்பி உள்ளது. இதனையடுத்து, தலைமை ஆசிரியர் பொறுப்புக்கு நவிகா குமார் நியமிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது திடீரென ராஜினாமா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.