ட்விட்டரில் உலக அளவில் டிரெண்டிங்கில் நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் முதலிடத்தி்ல் உள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது ராகுல் பேசியது உலகளவில் டிரெண்டிங்கில் 2-வது இடத்தில் உள்ளது. மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாஜகவை பிரிந்து தொங்கவிட்டார். மக்களின் பிரச்சனைகளை பிரதமர் மோடி புரிந்துக்கொள்ளவில்லை என விமர்சனம் செய்தார். ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது. 

இதனால் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மூலமாக மோடியின் நண்பர் பலனடைந்துள்ளார் என ராகுல் குற்றம்சாட்டினார். பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் அனைவரின் வங்கிக்கணக்கில் 15 லட்ச ரூபாய் போடப்படும் என மோடி கூறினார். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார். இதுவரை எதுவும் நடக்கவில்லை என்று மக்களவையில் மோடியை கடுமையாக விமர்சித்தார். 

இந்நிலையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது ராகுல் பேசியது உலகளவில் டிரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் ராகுல் பேச்சு வைரலாகி வருகிறது. ராகுல்காந்தியின் ஆவேச பேச்சை காங்கிரஸ் தொண்டர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.