கடந்த 2014ம் ஆண்டு மே மாதம், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபின்,  ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களில் கலவரம் ஏற்படத் தொடங்கிவிட்டது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

சட்டீஸ்கரில் இந்திய தேசிய மாணவர்கள் அமைப்பு சார்பில் நமது உரிமை என்ற தலைப்பில் பழங்குடி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது-

கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் மத்தியில்  பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ெடல்லியில் ஆட்சியில் அமர்ந்தபின், பல மாநிலங்களில் பிரச்சினைகளும், முரண்பாடுகளும் ஏற்படத் தொடங்கிவிட்டது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் காஷ்மீரில் தீவிரவாதம் அடங்கி, அமைதி ஏற்படத்த தொடங்கி இருந்தது. பல்வேறு தரப்பு மக்களிடம் நாங்கள் பேச்சு நடத்தினோம்.  எங்கள் நோக்கம் மக்களிடம் பேச்சு நடத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினோம். கிராம பஞ்சாயத்து தேர்தலையும் நடத்தினோம்.

2004ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தபின், ஜம்மு-காஷ்மீரில் தீவிரவத்தை படிப்படியாகக் குறைத்து முடிவுக்கு கொண்டு வந்தோம். ஆனால், இப்போது,  நகர், சிக்கிம், பஸ்தர் என நாட்டில் எங்கு பார்த்தாலும் தீவிரவாத தாக்குதல் நடக்கிறது.

உத்தரப்பிரதேசம், தமிழகத்தில் அமைதி துடைத்து எறியப்பட்டுவிட்டது. காஷ்மீர் பிரச்சினையில் யார் லாபம் அடைவது?. ஆர்.எஸ்.எஸ். அமைப்பா, பாகிஸ்தானா அல்லது சீனாவா?

காஷ்மீரில் மக்கள் அமைதியை குலைக்கும் வகையில் யார் செயல்படுகிறார்கள். இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் அங்கு மக்கள் அமைதியா வாழ்ந்ததை பார்த்தீர்கள்.

ஆனால், பா.ஜனதா, பி.டி.பி. கட்சியுடன் சேர்ந்து ஆட்சிக்கு வந்தபின் அங்கு நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது. இதே போலவே சட்டீஸ்கரிலும் நடந்துள்ளது.  பஸ்தரில் நடக்கும் கலவரத்தால், ஆர்.எஸ்.எஸ். மற்றும்தொழிலதிபர்கள்தான் பயன் அடைகிறார்கள். சட்டீஸ்கரில் நீர்,காடுகள், இயற்கை வளங்கள் நிரம்பிய ஒரு மாநிலம். இந்த வளங்களை அவர்கள் கொள்ளை அடிக்க முயற்சிக்கிறார்கள்.

தலித்களையும், ஆதிவாசிகளையும், பிற்படுத்தப்பட்ட மக்களையும் தொடர்ந்து அழுத்தவே ஆர்.எஸ்,எஸ். அமைப்பு முயல்கிறது. அவர்களை அடக்கி ஆழ முயற்சிக்கிறது. இதனால், ஹரியானாவில் ஜாட் மற்றும் ஜாட் அல்லாத சமூகத்தினருக்கும் கலவரம் மூண்டது. காஷ்மீரில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், அசாமில் வங்காளிக்கும், வங்காள மொழிபேசாதவர்களுக்கும் கலவரம் ஏற்படத் தொடங்கிவிட்டது.  பா.ஜனதாஎங்கெல்லாம் செல்கிறதோ அங்கு மக்கள் சண்டையிடுகிறார்கள்.

ஆனால், காங்கிரஸ் கட்சி அமைதியை விரும்புகிறது. பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாக்க நினைக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.