ரஃபேல் தொடர்பாக ராகுல் காந்தியுடன் எதுவும் பேசவில்லை என்று மனோகர் பாரிக்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். என்னை சந்திக்க வந்தது அரசியல் ஆதாயத்துக்காக என்பதை நினைக்கும்போது வருந்துகிறேன் என கூறியுள்ளார். 

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும், கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கரை, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, புதிய ரஃபேல் ஒப்பந்தத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த தாம் எதுவும் செய்யவில்லை என மனோகர் பாரிக்கரே தெளிவாக கூறியதாகவும், அனில் அம்பானி ஆதாயத்துக்காக பிரதமர் மோடியே ஒப்பந்தத்தை உருவாக்கியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். 

இது தொடர்பாக ராகுல் காந்திக்கு மனோகர் பாரிக்கர் எழுதியுள்ள கடிதத்தில் நோயால் அவதியுற்றுள்ள தன்னை சந்தித்ததை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தியது வருத்தமளிக்கிறது.  தன்னை சந்தித்த போது ரஃபேல் தொடர்பாக ராகுல்காந்தி எதுவும் பேசவில்லை. மேலும் தற்போது அது குறித்து விவாதிக்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.