காய்கறி வியாபாரி ராமேஷ்வருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மதிய உணவு விருந்து அளித்தார்

காய்கறி விற்பனையாளர் ராமேஷ்வர் உடனான தனது சந்திப்பு தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ராமேஷ்வர் இந்தியாவின் குரல், அவரது பிரச்சினைகள், வலிகள் மற்றும் சவால்கள் முக்கிய விவாதத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. அந்த இந்தியாவின் குரலைக் கேட்பது நமது தார்மீகப் பொறுப்பு. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்த்துப் போராட உதவுங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

தக்காளி விலை அதிகமாக இருப்பதால் அதனை வாங்க முடியவில்லை என்று ராமேஷ்வர் தனது காலி காய்கரி கை வண்டியுடன் பேசிய வீடியோ வைரலானது. அதில், வேறு ஏதாவது காய்கறிகள் வாங்குவீர்களா என்று கேட்டதற்கு, தன்னிடம் பணம் இல்லை என்று கூறி அவர் உடைந்து போன காட்சிகள் பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Scroll to load tweet…

ராமேஷ்வர் உடனான சந்திப்பு தொடர்பாக ராகுல் காந்தி பதிவிட்டுள்ள 9 நிமிட வீடியோவில், ராமேஷ்வர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தனது வீட்டில் ராகுல் காந்தி உணவு பரிமாறுவதும், அவர்களுடன் கலந்துரையாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

YouTube video player

அந்த வீடியோவில், ‘இனி வாழ விரும்பவில்லை’ என்று ராகுல் காந்தியிடம் ராமேஷ்வர் கூறுகிறார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “மீண்டும் அப்படி கூறாதீர்கள். இதயத்திலிருந்து பேசுவது பலவீனம் அல்ல; நேர்மை. மற்றவர்கள் சொல்வதைப் பற்றி சிந்திக்க வேண்டாம். நீங்கள் உண்மையை மட்டுமே கடைபிடிக்க வேண்டும்.” என்கிறார். தன்னை சார் என அழைக்க வேண்டாம் எனவும், ராகுல் என அழைத்தால் போதும் என்றும் ராமேஷ்வரிடம் அவர் கூறுகிறார்.

‘கர் வப்சி’: மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்புகிறார்களா பாஜக முன்னாள் அமைச்சர்கள்?

ராகுல் காந்தி தனக்கு விருந்தளித்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என்றும், தனது வலியைப் புரிந்து கொண்ட ராகுலுக்கு நன்றி என்றும் ராமேஷ்வர் கூறியுள்ளார். மத்திய அரசை விமர்சித்த காய்கறி வியாபாரி ராமேஷ்வர், பணக்காரர்கள் செழிக்கிறார்கள்; ஆனால், ஏழைகளால் வாழவே முடியவில்லை என்றும் தனது வேதனையை பகிர்ந்து கொண்டுள்ளார்.