Asianet News TamilAsianet News Tamil

ஆளும் கட்சிக்கு எதிராக ஒருவார்த்தை கூட பேசமாட்டேன்... சரண்டரான ராகுல்காந்தி..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தன்னை விமர்சிப்பதை புரிந்துகொள்வதாகவும், ஆனால் தான் அவர்களை ஒரு வார்த்தைக்கூட விமர்சிக்கமாட்டேன் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi files nomination from Wayanad
Author
Kerala, First Published Apr 4, 2019, 4:17 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தன்னை விமர்சிப்பதை புரிந்துகொள்வதாகவும், ஆனால் தான் அவர்களை ஒரு வார்த்தைக்கூட விமர்சிக்கமாட்டேன் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதனையடுத்து கேரளாவில் போட்டியிட வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதனை ஏற்று கொண்டு ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அக்கட்சி நிர்வாகிகள் உற்சாகம் அடைந்தனர். ராகுலின் வயநாடு போட்டி, அங்கு ஆளும் கட்சியாக உள்ள கம்யூனிஸ்ட்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   Rahul Gandhi files nomination from Wayanad

இந்நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு கேரளாவின் கோழிக்கோடு வந்த ராகுல்காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டரில் வயநாடு சென்றார். வேட்டி சட்டையில் வந்த ராகுலுக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டு காங்கிரஸ் தொண்டர்களுடன் இணைந்து பேரணியாக சென்று வயநாடு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் பிரியங்காகாந்தி, முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, ரமேஷ் சென்னிதலா உடன் சென்றார்.

 Rahul Gandhi files nomination from Wayanad

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வயநாட்டில் நான் போட்டியிடுவது குறித்து மோடியோ, யோகியோ என்ன சொன்னாலும் அதனை பொருட்படுத்தப் போவதில்லை. தென்னிந்திய மக்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கருதுகின்றனர். இந்தியா என்பது ஒன்றே என்ற செய்தியை சொல்வதற்காக இங்கு போட்டியிடுகிறேன் என்றார். Rahul Gandhi files nomination from Wayanad

மேலும் சிபிஎம் கட்சி விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் எனக்கு எதிரான எல்லா தாக்குதல்களையும் புன்னகைகளுடன் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களுக்கு எதிரான ஒருவார்த்தையும் பேசமாட்டேன். அவர்களின் அனைத்து தாக்குதல்களையும் நான் மகிழ்ச்சியோடு எதிர்கொள்வேன் என ராகுல்காந்தி கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios