உலகிலேயே இரு வெவ்வேறு நாடுகளுக்கு தேசிய கீதம் எழுதிய ஒரே மனிதர் யார் தெரியுமா?
National Anthem : இன்று நமது பாரத நாடு தனது 78வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றது. தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உலகிலேயே இரு வெவ்வேறு நாடுகளுக்கான தேசிய கீதங்களை எழுதி புகழ்பெற்ற ஒரே நபர் தான் நமது ரபீந்தரநாத் தாகூர். இந்தியாவிற்கான தேசிய கீதத்தை இயற்றியது அவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆனால், இப்போது பல பிரச்சனைகளை சந்தித்து வரும் தெற்கு ஆசிய நாடான பங்களாதேஷிற்கும் தேசிய கீதத்தை இயற்றி கொடுத்தது ரவீந்திரநாத் தாகூர் தான்.
வங்காள மொழியில் கடந்த 1905ம் ஆண்டு இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றிய ரபீந்தரநாத் தாகூர் எழுதிய வரிகளை நான் தற்போது வரை அந்நாடு தனது தேசிய கீதமாக பயன்படுத்தி வருகிறது. கடந்த 1971ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்ற பங்களாதேஷ் தற்பொழுது ராணுவ ஆட்சி முறையில் இருந்து வருகிறது.
அரசியில் புது ரத்தம் பாய்ச்ச வேண்டும்! ஒரு லட்சம் இளைஞர்கள் வேண்டும்! - PM Modi!
84 வயதுடைய நோபல் பரிசு வென்ற முகமது யூனஸ் தான் பங்களாதேஷின் புதிய இடைக்கால தலைவரக பதவி வகித்து வரும் நிலையில், வருகின்ற 26 மார்ச் 2025 அன்று மீண்டும் அந்த நாடு சுதந்திரம் அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாகவே பங்களாதேஷில் மிகப்பெரிய கலவரம் வெடித்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அந்நாட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
விரைவில் அந்த நாட்டில் அமைதி திரும்ப பிரதமர் மோடி உள்பட, பல நாட்டு தலைவர்களும் வேண்டிய முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பங்களாதேஷுக்கும் நமது இந்திய திருநாட்டிற்கும் தேசிய கீதத்தை அளித்த ரபீந்தரநாத் தாகூரை அந்த நாட்டு மக்களும் நினைவுகூர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஒலிம்பிக் வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி!!