Asianet News TamilAsianet News Tamil

"சிறந்த இந்தியாவை உருவாக்கவே மக்கள் வரிசையில் நிற்கிறார்களாம்" - "எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் மோடி"

queues are-for-a-better-india-says-modi-puq3p7
Author
First Published Nov 22, 2016, 5:06 PM IST


புதுடெல்லி, நவ.22-

என்னுடைய நடவடிக்கையின் மூலம் சிறந்த இந்தியாவை உருவாக்கவே மக்கள் வங்கிகள், தபால்நிலையங்கள் முன் வரிசையில் நிற்கிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பாரதியஜனதா கட்சியின் நாடாளுமன்றக் கூட்டம் இன்று நடந்த து. இதில் பிரதமர் மோடி, மத்தியஅமைச்சர்கள்  வெங்கையா நாயுடு, ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும், எம்.பி.களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி  எம்.பி.கள் மத்தியில் ஏறக்குறைய 10 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர் கூறியதாவது-

கருப்ப பணத்தை ஒழிக்கும் முயற்சியில் அரசு எடுத்துள்ள நடவடிக்கையின் தொடக்கம் தான் நான் எடுத்த ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு. இந்த நடவடிக்கைக்கு பாரதியஜனதா கட்சியினர் அனைவரும்  ஆதரவாக இருப்பது மகிழ்ச்சி  அளிக்கிறது.

நான் எடுத்த முடிவை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இதனால் தான், சிறப்பான இந்தியாவை உருவாக்குவதற்காக மக்கள் வங்கிகள், தபால்நிலையங்கள் முன்பும் வரிசையில் நிற்கிறார்கள்.

நான் இங்கு வந்து இருப்பது என்னுடைய அமைச்சரவை நண்பர்களுக்கும், எனக்காவும் அல்ல. நான் இங்கு மக்களுக்காக வந்து இருக்கிறேன். ஏழைமக்களுக்கான நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும்.  என்னுடைய அரசு ஏழை மக்களுக்கானது. ரூ.500, ரூ1000 நோட்டு தடை செய்த முடிவு என்பது ஏழை மக்களுக்கு உதவுவதற்காக எடுக்கப்பட்டது.

கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியில் கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் தங்களின் கணக்கை ஒப்படைக்கவும், முறைகேடாக சேர்த்த சொத்துக்களை அரசிடம் தெரிவிக்கவும் போதுமான அவகாசம் கொடுக்கப்பட்டது. நான் கொடுத்த காலஅவகாசத்துக்குள்   கருப்பு பணத்தை ஒப்படைக்காதவர்களை நான் சும்மாவிட மாட்டேன் என்று எச்சரிக்கிறேன் .

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios