கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதில் பஞ்சாப்புக்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதில் எந்த தரப்பினருக்கு, எந்த மாநிலத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது பெரும் கேள்வியாகும் விவாதப்பொருளாகவும் இருக்கிறது. கொரோனா தடுப்பு மருந்தில் யாருக்கு முன்னுரிமை என்ற கேள்வியை பிரதமர் மோடியை நோக்கி எதிர்க்கட்சியினர் எழுப்பிவருகின்றனர்.

இந்நிலையில், அதிகமான வயது முதிர்ந்த மக்கள் தொகையை கொண்டிருப்பதால், பஞ்சாப்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உயிரிழக்க நேரிட்டது. எனவே கொரோனா இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் பஞ்சாப் மாநிலத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.