புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் மற்றும் இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் ஒருவருக்கு ஒருவர் நடுரோட்டில் கற்களை வீசி தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

நாட்டின் பெரும்பான்மை மக்களான SC/ST மக்களை பஞ்சமர்கள் என்றும், MBC/OBC மக்களை சூத்திரர்கள் - விபச்சாரி மகன் என்றும், பெண்களை விபச்சாரிகள் என்றும் இழிவுபடுத்தும் பார்ப்பன 'மனுதர்ம சாஸ்திரம்' கொளுத்தும் போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது திடீரென அங்கு வந்த இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். திடீரென பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் சாலையோரத்தில் இருந்த கற்களை தூக்கி வீசி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது பாதுகாப்பு இருந்த போலீசார் மீதும் கற்கள் விழுந்தன. இதனை அடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும் கற்கள் வீசினர். தொடர்ந்து இருதரப்பினரும் நடுரோட்டிலேயே கற்களை வீசி தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்தார்.