Asianet News TamilAsianet News Tamil

காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்...! விவசாயிகள் போராட்டத்தில் ஓங்கி ஒலித்த புதுச்சேரி ஆளுநர் குரல்...! 

Puducherry Governor who wrote letter to the Prime Minister
Puducherry Governor who wrote letter to the Prime Minister
Author
First Published Apr 2, 2018, 5:15 PM IST


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் புதுச்சேரி, காரைக்கால் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அதில் கூறியுள்ளார்.

காவிரி நதிநீர் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு வழங்கப்படும் காவிரி நீர் குறைத்த உச்சநீதிமன்றம், காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் திட்டத்தை அமைக்குமாறு உத்தரவிட்டது. மேலும், காவிரி மேலாண்மை ஸகீம் என
குறிப்பிடப்பட்டிருந்த அந்த வார்த்தை காவிரி மேலாண்மை வாரியம் என புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் எனக் கூறி தமிழக விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுததி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறிய ஸ்கீம் என்ற வார்த்தைக்க விளக்கம் கேட்டு மத்திய அரசு நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தது. இது குறித்து இன்று விளக்கமளித்த உச்சநீரிமம்னறம், காவிரி தீர்ப்பில் செயல் திட்டம் தான் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலாண்மை வாரியம் குறிப்பிடவில்லை என்று விளக்கமளித்தது.

ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விளக்கமளித்துள்ளார். தமிழகத்துக்கு இது பெரிய பிரச்சனைதான் என்றும், தமிழகத்துக்குரிய காவிரிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்கப்பட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், நாங்கள் கூறியது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது தமிழக விவசாயிகளின் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் புதுச்சேரியியின் துணை நிலை ஆளுநரான கிரண்பேடி, தாமதம் இன்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், தாமதமின்றி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவினை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் புதுச்சேரி, காரைக்கால் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

காவிரி தீர்ப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக வழக்குத் தொடர மாநில அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக தாமதமின்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்று கிரண்பேடி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios