நெல்லித்தோப்பு தொகுதியில் கடந்த 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் வேட்பாளராக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 11,144 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஓம்சக்திசேகரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக் கொண்டார்.
இவருக்கு சட்டபேரவைத் தலைவர் வைத்திலிங்கம் காலை 11 மணியளவில் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதில், பேரவை துணைத் தலைவர்.சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜஹான், மல்லாடி கிருஷ்ணாராவ், உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள், திமுக எம்.எல்.ஏக்கள் பலர் கலந்து கொண்டனர்.
